18th April 2023 22:23:33 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இராணுவ தலைமையகத்தின் இராணுவ சேவை வனிதையர் பிரிவில் சேவையாற்றும் 50 சிவில் ஊழியர்களுக்கு திங்கட்கிழமை (17) இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற சம்பிரதாய தேநீர் விருந்துபசாரத்தின் பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் என் மகாவிதான கேஎஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்புடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் இந்த விநியோக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தின் போது திருமதி ஜானகி லியனகே அனைத்து சிவில் ஊழியர்களையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.