31st January 2023 18:51:03 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் மேலும் ஒரு நலன்புரி திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை புதன்கிழமை (ஜனவரி 25) குருநாகல் வெஹெர இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் முன்னெடுத்தது.
இதன் போது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சிவில் ஊழியர்களுக்கு தலா 7,500/= பெறுமதியான நிவாரணப் பொதிகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பயிலும் 100 மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதே நிகழ்வில், 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 132 மாணவர்களுக்கு தலா 5,000/= ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்துகொண்டார் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி கேணல் எச்எ கீர்த்திநாத, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.