Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th June 2023 21:35:10 Hours

காலி 'விருகெகுல்' பிள்ளைகளின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

காலி 'விருகெகுலு' பாலர் பாடசாலையின் பிள்ளைகளின் வருடாந்த விளையாட்டுப் போட்டி புதன்கிழமை (ஜூன் 14) காலி 14 கெமுனு ஹேவா படையணி மைதானத்தில் நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதயர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்விற்கு வருகை தந்த அவரை பிள்ளைகள் அன்புடன் வரவேற்றனர்.

பாலர் பாடசாலையின் அனைத்துக் பிள்ளைகளும் சந்தோசமாக தடை தான்டல் ஓட்டம், கூழாங்கற்களைக் கடந்து செல்வது, உயரம் தட்டுதல், இனிப்பு விளையாட்டு, விநோத விளையாட்டு, தொப்பி மாற்றல் விளையாட்டு, கம்பளிப்பூச்சி விளையாட்டு, வளைய ஆட்டம், பூ விளையாட்டு, சீனியும் எறும்புகளும் மற்றும் அணிநடை கண்காட்சி போன்ற பல்வேறு விளையாட்டுகளில் பங்குபற்றினர்.

விளையாட்டுப் போட்டியின் போது பிள்ளைகளின் பெற்றோருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்வும் நடைபெற்றது. கேளிக்கை மற்றும் விளையாட்டுகள் நிறைந்த அன்றைய நிகழ்வானது பங்குபற்றிய பிள்ளைகளுக்கு பிரதம விருந்தினர் பரிசில்கள் வழங்கியதுடன் நிறைவடைந்தது.

61 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி, இராணுவ சேவை வனிதயர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மகாவிதான, இராணுவ சேவை வனிதயர் பிரிவின் பணிநிலை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.