18th June 2023 19:27:02 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கும் தியத்தலாவை 'விருகெகுலு' பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 16) அன்று 'விருகெகுலு' சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த அவர் சிறுவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
பேண்ட் கண்காட்சி, முச்சக்கர சைக்கிள் ஓட்டம், நட்சத்திர விளையாட்டு, பால் விளையாட்டு, மீன் வலை விளையாட்டு போன்ற பல்வேறு விளையாட்டுக்களில் பிள்ளைகள்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் பிள்ளைகளின் பெற்றோர்களும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் உரையாடி தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளையும் எழுதினார்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, தியத்தலாவை 'விருகெகுலு' பாலர் பாடசாலை நிர்வாகத்திற்கு பொறுப்பான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொறுப்பாளர் திருமதி உதேனி ரத்நாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.