27th July 2023 08:51:05 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு, இலங்கை இராணுவப் பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் சனிக்கிழமை (ஜூலை 22) இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் முல்லேரியா தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் விடுதி எண் 05 இன் நோயாளிகளைப் பார்வையிட்டதுடன், அங்கிருக்கும் 35 நோயாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்கினர்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா மற்றும் பல சேவை வனிதையர் பெண்கள் இணைந்து உபசரிப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.
அவர்களை கலிப்ஷோ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி மகிழ்வித்ததுடன், மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.