09th January 2022 18:34:18 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த நலன்புரி திட்டங்களில் ஒன்றாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணி குடும்பங்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 27 டிசம்பர் 2021 அன்று பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியது.
176 சிறுவர்கள் அந்த நிவாரணப் பொதிகளைப் பெற்றுக்கொண்டதுடன் மேலும் 10 மாணவர்கள் இந்நிகழ்வின் போது விசேட ஊக்கத்தொகையாக பாடசாலைப் பைகள், எழுதுபொருட்கள் மற்றும் புத்தர் சிலைகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இனோகா இளங்ககோன் அவர்கள் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்களுடன் கலந்து சிறப்பித்தார்.
சேவை வனிதையர் பிரிவின் பெண்கள் அன்றைய தினம் (27) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், ரூ. 150,000.00 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினால் வழங்கப்பட்டது.