06th April 2022 13:26:51 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் தலைமையில் 24 மார்ச் 2022 அன்று சேவை வனிதையர் பிரிவின் நலன்புரிப் பணிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் விஜயபாகு காலாட் படையணியின் 2009 மே மாதத்தில் போரில் ஊனமுற்று ஓய்வுபெற்ற போர்வீரருக்கு புதிய வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சேவை வனிதையர் பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, தெற்கு ஹிங்குராங்கொட திட்டத்திற்கான நிதி உதவி மற்றும் மூலப்பொருட்களை ஸடவ் வோட்ச் தனியார் நிறுவனம் வழங்கியது. இலங்கையின் 3 வது மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் தங்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இந்த புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணியை சில வாரங்களுக்குள் மேற்கொண்டுள்ளனர்.
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஊனமுற்றவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் சேவை வனிதையர் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட போர்வீரர்களுக்கான வீடு கட்டும் திட்டம் நாடளாவிய ரீதியில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது.
சேவை வனிதையர் பிரிவினரின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.