07th April 2022 18:33:46 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமுது மானகே மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் தலைமையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து குடும்ப உறுப்பினர்களுக்கு உள்நாட்டு (ஆயுர்வேத) மருத்துவ நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் தொடர்பாக விரிவுரை வழங்கப்பட்டது.
போயகனேவில் உள்ள விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தின் 'சல்யூட்' பல்நேக்கு மண்டபத்தில் 24 மார்ச் 2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியும் பொது பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த ஏற்பாட்டின் போது மொத்தம் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவ உதவியைப் பெற்று மருத்துவ நடைமுறைகள் தொடர்பாக அறிந்து கொண்டனர்.
இந்த ஏற்பாட்டிற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி, சுதேச மருத்துவக் கழகத்தின் பணிப்பாளர் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் குழுவிற்கு, விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமுது மானகே அவர்களால் நினைவு சின்னம் மற்றும் சேவைப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, தல்சீமியா நோயினால் பாதிக்கப்பட்ட இராணுவக் குடும்பங்களைச் சேர்ந்த 7 மாணவர்களுக்கும் சேவை வனிதையரால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.