22nd June 2022 15:31:30 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரும், பல்லேகலே விரு கெகுலு பாலர் பாடசாலைக்கான சேவை வனிதையர் பிரிவின் பிரதம மேற்பார்வை அதிகாரியுமான திருமதி ஆஷா அதாவுடா, நிர்வாக விடயங்கள் மற்றும் கல்வி முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை ஜூன் 16 அன்று பல்லேகல “விரு கெகுலு பாலர் பாடசாலைக்கு” மேற்கொண்டார்.
வருகையின் போது திருமதி ஆஷா அதாவுடா, பிள்ளைகளுடன் நட்புடன் உரையாடி, இனிப்புகளை வழங்கினார். அத்துடன் பாலர் பாடசாலை ஆசிரியையுடன் கலந்துரையாடியதுடன் பாலர் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
இந் நிகழ்வில் 11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.