19th November 2022 13:17:36 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமுது மானகே தலைமையில் வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) குருநாகல், போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் ‘சல்யூட் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
வருடாந்த பொதுக்கூட்டத்தில் விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய் ஒருவரின் மகனுக்கு விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் சக்கர நாற்காலி பரிசாக வழங்கப்பட்டது. அதேபோன்று, மலியதேவ சிறுவர் இல்லத்தில் வசிக்கும், பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கு தகுதி பெற்றுள்ள மற்றுமொரு மாணவருக்கு மடிக்கணினி மற்றும் அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் படையினருக்கு ‘வெற்றிகரமான வாழ்க்கை துனையாக இருப்பது எப்படி' என்ற தலைப்பில் திருமதி அமா திஸாநாயக்க அவர்களால் விரிவுரையும் நடாத்தப்பட்டது.