02nd December 2022 08:46:21 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமுது மானகே சேவை வனிதையர் பிரிவின் பெண்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) முல்லேரியாவ தேசிய மனநல நிறுவனத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கும் விடுதிக்கு விஜயம் செய்தனர்.
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவியில் திருமதி குமுது மானகே அவர்களினால் ரூ. 30,000/= வழங்கப்பட்டதுடன், காலையில் விஜயம் செய்த குழுவினரால் விடுதியையும், வளாகத்தையும் சுத்தம் செய்து, நோயாளிகளுக்கு மதிய உணவையும் வழங்கினர்.
தலைமையக படையலகு கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஎஸ்எஸ் டி சில்வா, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்கிய குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.