24th February 2023 11:24:32 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் குருநாகல், போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் கட்டுவபத்வெவ போதிருக்காராமய விகாரையின் ஸ்ரீ சுசரித தர்ம பாடசாலையின் மாணவர்களுக்கு 12 பெப்ரவரி 2023 அன்று பாடசாலை பொருட்கள் மற்றும் வகுப்பறை உபகரணங்கள் வழங்கிப்பட்டன.
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமுது மானகே பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், 154 ஏழை மாணவர்களுக்கு ரூ.300,000/-க்கும் அதிக மதிப்புள்ள எழுதுபொருட்கள், வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பாடசாலை மாணவர்களுக்காக விலையுயர்ந்த புத்தக அலுமாரி உள்ளிட்ட அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவத் தலைமையகத்தின் பொது பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந் நிகழ்ச்சி நடைபெற்றதுடன், நிகழ்வில் பயனாளிகளுக்கு சேவை வனிதையர் பெண்களினால் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
விஜயபாகு காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நிலையத் தளபதி பிரிகேடியர் பிரபாத் கொடிதுவக்கு மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.