27th February 2023 12:12:25 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 17) விஜயபாகு காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நதீர விஜேகோன் அவர்களினால் விஜயபாகு காலாட் படையணியின் அதிகார வாணையற்ற அதிகாரி ஒருவருக்கு வீட்டுனை முழுமைப் படுத்த நிதி உதவியாக ரூ. 100,000/= வழங்கப்பட்டது.
அதிகார வாணையற்ற அதிகாரியினால் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் அனுசரணை வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.