31st March 2023 10:14:55 Hours
குருநாகல் போயகனே விஜயபாகு காலாட் படையணியின் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் மற்றும் சிவில் குடும்பங்களைச் சேர்ந்த 41 பிள்ளைகளுக்கு விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் புதன்கிழமை (மார்ச் 22) படையணி வளாகத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்ட்டன.
இந் நிகழ்ச்சி விஜயபாகு காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.