19th May 2023 20:01:49 Hours
விஜயபாகு காலாட் படையணியின் படைத்தளபதியும் பொதுபணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் மேற்பார்வையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (மே 09) படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர். இந்த திட்டத்தின் போது மொத்தம் 260 இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கினர்.