26th October 2022 09:34:39 Hours
உலக சிறுவர் தினத்தை ஒட்டி இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவு 2022 செப்டெம்பர் 29 அன்று கொழும்பு – 10 ஸ்ரீ தம்ம மாவத்தை லோரிஸ் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறார்களுக்கு மதிய உணவை வழங்கியது.
இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா தில்ஹானி ரணவக்க மற்றும் சேவை வனிதையர் குழு இணைந்தது சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலன் 24 பிள்ளைகளுக்கு மதிய உணவை வழங்கினர்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் முதலாவது இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி, மேஜர் பீஆர்பீகே கல்ஹேன மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இராணுவ கலிப்சோ இசைக்குழுவினரால் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், நிகழ்வின் இறுதியில் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து பிள்ளைகளுக்கும் சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டதன.