19th December 2022 10:37:16 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவும் இணைந்து இலங்கை பொறியியல் சேவைபடையணி மற்றும் இலங்கை இராணுவ மகளீர் படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் 230 பிள்ளைகளுக்கு புத்தகம் வழங்கும் “அத-ஹித்த 2022” இன் 7வது கட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) மத்தேகொட இலங்கை பொறியியல் சேவைபடையணியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
"அத-ஹித்த 2022" தொடரின் பிரதான அனுணையாளர்களாக திரு பிரசாத் லொகுபாலசூரிய, திரு சிந்தக அபேசேகர, திரு டானி பெரேரா, திருமதி சுபோதா செத் ஹேவகே, திரு உஷான் முதித குணவிக்ரம, திருமதி சாரினி நாணயக்கார மற்றும் திரு. மாலிகா ரோஷன் ரெட்ரிகோ, ஆகியோர் காணப்படுகின்றார்கள்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஷம்மி ஜயவர்தன மற்றும் இலங்கை பொறியியல் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். திரு பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் அவரது குழுவினர், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.