20th April 2023 08:49:05 Hours
இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை (ஏப்ரல் 1) இலங்கை இராணுவ மகளீர் படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களுக்கு இலவச மூக்குகண்ணாடிகளை வழங்கினர்.
இந் நிகழ்ச்சியின் போது, பார்வை குறைபாடுள்ள 23 சிவில் ஊழியர்களுக்கு பார்வை பரிசோதனையை அடுத்து உதவிகள் வழங்கப்பட்டன.
அந்த முக்குகண்கண்ணாடிக்கான நிதியுதவி திரு. ஜகத் புஷ்பகுமாரவின் அன்பு மனைவி திருமதி. சுரங்கி பிரியங்கிகா அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை இராணுவ மகளீர் படையணியின் நிலை தளபதி, 1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி கட்டளை அதிகாரி, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.