07th July 2023 23:53:54 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர்பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன் கிழமை (ஜூன் 28) பனாகொட பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர்பிரிவின்தலைவிதிருமதி ஷியாமலி விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் அழைப்பாளராக கலந்து கொண்டதுடன், சேவை வனிதையர் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது, அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவ மகளிர் படையணியின்படைத் தளபதி உரையை நிகழ்த்தினார்.
இச்சந்திப்பின் போது, போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்படாத பல்வேறு நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
திருமதி ஷியாமலி விஜேசேகர அவர்கள் தலைவியாக கடமைகளை பொறுப்பேற்றதிலிருந்து இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட நலன்புரி திட்டங்களை முன்னிலைப்படுத்தும் ஒரு சிறிய காணொளி காட்சி திரையிடப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு அங்கமாக, இலங்கை இராணுவ மகளிர் படையணியில் சேவை செய்யும் சிவில் ஊழியர்களுக்கு காய்கறிப் பொதிகள் வழங்கப்பட்டன.