12th July 2023 20:17:35 Hours
இலங்கை இராணுவ மகளீர் படையணியனது சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகம் மற்றும் முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணியில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு ஜூன் 28 அன்று இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தின் விழாவின் போது மரக்கறி பொதிகளை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இராணுவ மகளீர் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர தலைமையில் வழங்கியது.
இவ் விழாவின் போது மொத்தம் 24 சிவில் ஊழியர்களுக்கு இலவச மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை இலங்கை இராணுவ மகளீர் படையணி தளபதியின் வழிகாட்டல் மற்றும் பங்களிப்பின் கீழ் இலங்கை இராணுவ மகளீர் படையணி தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவ மகளீர் படையணியின் சேவை வனிதையர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர, நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையணி தலைமையகத்தின் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.