19th July 2023 09:36:04 Hours
இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் செவ்வாய்க் கிழமை (ஜூலை 11) சந்துன்புர ‘சரண’ முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் முதியோர் இல்லத்திற்கு அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கியதுடன், மதிய உணவின் பின்னர், இராணுவ காலிப்சோ இசைக் குழுவினரால் வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சியில் அனைத்து முதியோரும் மகிழ்விக்கப்பட்டனர்.
தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியதுடன் 3 வது இலங்கை இராணுவ மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச். டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் 3 வது இலங்கை இராணுவ மகளீர் படையணியின் அனைத்து நிலையினராலும் இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளீர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர அவர்கள் கலந்து கொண்டதுடன், இந்த நிகழ்வில் 3 வது இலங்கை இராணுவ மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அனைத்து படையினரும் கலந்து கொண்டனர்.