17th February 2022 09:44:13 Hours
எதிர்வரும் ஆண்டிற்கான இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய செயற்குழு உறுப்பினர்களை நியமகை்கும் பொதுக் கூட்டம் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில் 2022 ஜனவரி 30 இடம்பெற்றது. இதன் போது மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதுவரை நிறைவேற்றப்பட்ட மற்றும் எதிர்வரும் வருடத்தில் நிறைவு செய்யவேண்டிய திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன்படி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள உத்தேச வீடமைப்புத் திட்டம் தொடர்பாகவும் அவர்கள் மேலும் கலந்துரையாடினர்.
பிரதான நிகழ்வின் பின்னர், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் பிள்ளைகளை நிகழ்விற்கு அழைத்து சேவை வனிதையர் பிரிவினரால் புலமைப்பரிசில்கள் மீண்டும் வழங்கப்பட்டன.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.