22nd March 2022 19:35:19 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரினைால் சனிக்கிழமை (12) ஹெரலியவெல இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அன்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, குருநாகல் சுகாதார வைத்திய அலுவலகத்தின் தொற்றா நோய்களுக்கான மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஷயமாலி அமரசிங்க மற்றும் டாக்டர் ஷஷிரோதா ரத்நாயக்க ஆகியோர் சேவை வனிதையர் உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் விரிவுரைகளை வழங்கினர்.
பின்னர், மற்றொரு விரிவுரையாக சிகை அலங்காரங்கள் மற்றும் அழகு கலாசாரம் தொடர்பான செயலமர்வு அழகுக்கலை நிபுணரான திரு ஜயந்த குமார அவர்களால் நடாத்தப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களால் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.