30th June 2022 16:35:09 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து, குடா கலத்தேவவில் உள்ள 10 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் மறைந்த சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினர்.
இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் சில அதிகாரிகளும் பிரதி நிலைய தளபதி கேணல் மங்கள நவரத்னவும் கலந்துகொண்டனர்.