06th July 2022 08:34:13 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு, கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியான திருமதி ஜானகி லியனகே அவர்களினால் ஞாயிற்றுக்கிழமை (3) குருநாகல் ஸ்புட்னிக் மகளிர் இல்லத்திற்கு அத்தியாவசிய பொதிகள், எழுதுபொருட்கள், உலர் உணவுகள், சுகாதார பொருட்கள் மற்றும் தொலைக்காட்சியும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
அன்றைய பிரதம அதிதியான திருமதி ஜானகி லியனகே, ஸ்புட்னிக் மகளிர் இல்லத்தின் சிறுமிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். திருமதி ஜானகி லியனகே அவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டதை தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்பின், ஸ்புட்னிக் மகளிர் இல்லத்தின் சிறுமிகள் வண்ணமயமான பொழுதுபோக்கு நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
1 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள், எழுதுபொருட்கள், கற்றல் பொருட்கள், தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள், ஒரு மாதத்திற்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் எல்இடி தொலைகாட்சி போன்றவை இந்த நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன. ஸ்புட்னிக் மகளிர் இல்லத்தின் சிறுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் சென்டர் கமாண்டன்ட், படையணி நிலைய தளபதி மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.