16th November 2022 15:12:56 Hours
பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் சேவை வனிதையர் பிரிவு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், போர்வீரரின் தந்தை பார்வையை இழந்துவிட்டதால் அவறுக்கு கண்ணில் வில்லை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு உதவியளிக்கப்பட்டது.
மாற்று அறுவை சிகிச்சைக்கு மேற்கூறிய நன்கொடையாளர்கள் கூட்டாக நிதியுதவி செய்த ரூபாய் 52,300 செலவானது. இந்த சத்திரசிகிச்சை வியாழன் (03) ஞாயிற்றுக்கிழமை தெனெத கண் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.