17th April 2023 19:35:46 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி, இராணுவ தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் தேசிய காவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே ஆகியோரின் வழிகாட்டலில் தேசிய காவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவு, இராணுவ சேவை வனிதையர் பிரிவு, நன்கொடையாளர்கள் மற்றும் படையணி தலைமையகத்தின் நிதியுதவியுடன் வாரியபொல நாவின்னவை சேர்ந்த மறைந்த சார்ஜென்ட் ஒருவரின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு வியாழக்கிழமை (ஏப்ரல் 06) பயணாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
இந்த வீட்டினை 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்டதுடன் மறைந்த சார்ஜெனின் மனைவியான திருமதி ஆர்எம்ஜிஆர்கே ரத்நாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களினால் நிதியுதவி வழங்கப்பட்டது.
வீட்டின் திறப்பு விழாவின் போது திருமதி லியனகே அவர்களால் குடும்பத்திற்கு ஒரு பிளெண்டர், ரைஸ் குக்கர், பீங்கான்கள் மற்றும் சலவை இயந்திரம் போன்ற சமையலறை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.