03rd March 2022 19:19:22 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் அனுசரணையின் மூலம் கொழும்பு இராணுவ வைத்தியசாலை மற்றும் பனாகொட இராணுவத் தள வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் சிப்பாய்களின் பாவனைக்காக இரண்டு 9 லொக்கர்களும் தொலைக்காட்சியும் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நில்மினி ஹெட்டியாராச்சி, நாரஹேன்பிட்டி மற்றும் பனாகொட வைத்தியசாலைகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த போது 2 வது (தொ) இலங்கை இராணுவ மருத்துவப் படையணியில் சேவையாற்றும் பெண் சிப்பாய்களின் நலனுக்காக தொலைக்காட்சியை வழங்கினார்.