21st March 2022 20:17:03 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் இலங்கை இராணுவ மருத்துவ படையணி குடும்பங்களின் மாணவர்களுக்கு தலா ரூ. 50,000/= பெறுமதியான 10 புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு இராணுவ மருத்துவமனை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்திய நிபுணர் திருமதி நில்மினி பெர்னாண்டோ, இராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் கிறிஷாந்த பெர்னாண்டோ அவர்களுடன் இணைந்து அந்த 10 பயனாளிகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கினார்.
அதே சந்தர்ப்பத்தில், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் குடும்பங்களைச் சேர்ந்த 17 சிறுவர் சிறுமிகளுக்கு இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
அழகியல் அம்சங்கள் நிகழ்விற்கு வண்ணம் சேர்த்தன. இந்நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.