06th May 2022 10:36:47 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரின் வருடாந்த பொதுக் கூட்டம் 2022 மார்ச் முன்றாம் வாரத்தில் கொழும்பு இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் திருமதி ஏ. நில்மினி பெர்னாண்டோ தலைமையில் புதிய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
கொஸ்மெட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் அனுசரணையுடன் அழகுக் கலை தொடர்பான சிறப்புப் பட்டறையும் இடம்பெற்றது.
தலைவி வரும் ஆண்டிற்கான திட்டத்தை முன்வைத்து, முந்தைய ஆண்டு முடிக்கப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்தார். நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.