10th June 2022 17:05:27 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் செவ்வாய்க்கிழமை (7) கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களின் நலனுக்காக கொழும்பு இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் 300 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவி வைத்தியர் நாமலி திலகரத்ன மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இரத்தம் தானம் செய்ய வந்த அனைவருக்கும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் டி-சர்ட்களும் பரிசாக வழங்கப்பட்டதன.