25th June 2022 11:34:42 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்திய நிபுணர், நில்மினி பெர்னாண்டோ மற்றும் அங்கத்தவர்கள் தேரருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வெசாக் தினத்தை முன்னிட்டு வண. பொல்பிதிமூக்கலானே பஞ்சசிறி தேரர் அவர்களால் கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் தர்ம பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ, இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் துசித ஹெட்டியாராச்சி, இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி உறுப்பினர்கள், இராணுவ மருத்துவப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப் பிரசங்கத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் 800 இற்கும் மேற்பட்ட படையினர் மற்றும் நோயாளர்கள் இணையம் மூலம் பிரசங்கத்தை கேட்டனர்.