23rd June 2023 22:26:29 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்திய நிபுணர் நில்மினி பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் முதியோர்வர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு கடுவலையில் உள்ள வில்பர்ட் பெரேரா முதியோர் இல்லத்தில் திங்கள் (ஜூன் 12) இடம்பெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு முதியவர்கள் உணவு உண்டனர். இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் பணியாளர்கள் மற்றும் முதியோர் இல்லத்தின் ஊழியர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.