24th June 2023 19:47:43 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் இராணுவக் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விதேவைகளை ஊக்குவிக்கும் நிமித்தம் ஆண்டு தோறும் வழங்கப்படும் தலா 50,000 ரூபா பெறுமதியான ஐந்து ஊக்குதொகைகள் ஜூன் 12 வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) நில்மினி பெர்னாண்டோ, சேவை வனிதையர் பிரிவின் உரிப்பினர்களுடன் இணைந்து இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஎசி பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்களின் ஆசிர்வாதத்துடன் இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், பொருளாதார நெருக்கடியில் உள்ள இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு பாடசாலை கல்வியை தடையின்றி தொடர கற்றல் உபகரண பொதிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.