21st July 2022 17:06:25 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு நலன்புரி நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் பனாகொட பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினால் பொறியியல் சேவைகள் படையணி சிப்பாய் ஒருவரின் நோய்வாய்ப்பட்ட பிள்ளைக்கு நிதியுதவி அளித்ததுடன், சிறப்புத் தேவையுடைய மற்றொரு பிள்ளைக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தீபிகா பிரசாந்தி சந்திரசேன அவர்களின் அறிவுறுத்தலின்படி, 8 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் சிப்பாய் ஒருவரின் மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், மற்றுமொரு நலன்புரி திட்டத்தின் கீழ் அதே சந்தர்ப்பத்தில் விசேட தேவையுடைய மற்றுமொரு பிள்ளைக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.