Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st December 2022 23:55:46 Hours

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

10 டிசம்பர் 2022 அன்று பொறியியல் சேவைகள் படையணி தலைமையத்தில் நடைபெற்ற பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது, பொறியியல் சேவைகள் படையணி குடும்பங்களைச் சேர்ந்த 68 பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பரிசுப் பொதிகள், மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் கிளையின் தலைவி திருமதி தீபிகா பிரசாந்தி சந்திரசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 68 மாணவர்கள் தலைவியிடமிருந்து புலமைப்பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் அடையாளமாக, 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை வெற்றிகரமாக முடித்த 10 மாணவர்கள் நிகழ்வின் போது அவர்களின் பாடசாலை உபகரணங்களின் பொதிகளை பெற்றுக்கொண்டதுடன், பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.