04th March 2023 22:18:16 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினர் திங்கட்கிழமை (பெப்ரவரி 20) பாங்கொல்ல ‘அபிமன்சல-3’ நல விடுதிக்கு போர்வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் செய்தனர்.
சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி ஜானகி லியனகே அவர்களின் ஆசியுடன் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தீபிகா சந்திரசேன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன், சந்திப்பின் பின்னர் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 'அபிமன்சல-3'க்கு 02 புல் வெட்டும் இயந்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் போர்வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட தேநீர் விருந்தின் போது சேவை வனிதையர் அவர்களுக்கு டவல்களை விநியோகித்தனர். பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.