15th June 2023 23:55:20 Hours
பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்களை முன்னெடுத்தது.
பெப்ரவரி 12 ஆம் திகதி 12 வது பொறியியல் சேவை படையணி முகாமில் இராணுவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பொறியியல் சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவு மூலம் பாடசாலை எழுது கருவிகள் மற்றும் உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதற்கிடையில், அதே சேவை வனிதையர் கிளையானது, பொறியியல் சேவை படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நிதிப் பங்களிப்பில் பத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அடங்கி மதிய உணவையும் வழங்கியது.
இதற்கிடையில், 3 வது பொறியியல் சேவை படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், மார்ச் 11 அன்று தரம் 5 புலமைப்பரிசு மற்றும் க.பொ.த.(சா.த) பரீட்சையில் சித்தியடைந்த இராணுவ உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன.
இதற்கிடையில், சிப்பாய் ஒருவரின் உடல் ஊனமுற்ற பிள்ளைக்கு ஜனவரி 02 அன்று 10 வது பொறியியல் சேவை படையணி முகாமில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.