28th July 2023 09:44:17 Hours
இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவு, வேகமாக வளரும் டிஜிட்டல் கற்றலுக்காக மாணவர்களின் தேவைகளை உணர்ந்து, இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் தகுதியுள்ள 55 இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களின் பிள்ளைகளின் நலனுக்காக மேலும் ஒரு மிகப் பெரிய நலன்புரித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் கலந்து கொண்டு வியாழக்கிழமை (27) டெப்லெட் கணினிகளை வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் ஆலோசனையின் பேரில், ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் டெப்லெட் சாதனங்களுக்கான அனுசரணையை, முன்னாள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரான திருமதி தனுஜா டயஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் 'சமூக பராமரிப்பு அறக்கட்டளை வழங்கியது.
அன்றைய பிரதம அதிதியின் வருகையின் பின்னர் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கள விளக்கேற்றல், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் இசைத்தல் மற்றும் பிற சம்பிரதாயங்கள் இடம் பெற்றதுடன், நலன்புரி திட்டத்தின் முக்கியத்துவத்தையும் பெறுநர்களுக்கு அதன் நன்மைகளையும் எடுத்துரைக்கும் வகையில் 'சமூக பராமரிப்பு அறக்கட்டளையின்' தலைவி திருமதி மல்ஷினி பெரேராவின் அன்புத் தாயரான திருமதி சாயா பெரேராவினால் குறித்த சாதணங்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு அடையாளமாக வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் இணைந்து, கல்வி நோக்கங்களுக்காக பெருமளவில் பயன்படுத்தக்கூடிய மொபைல் டெப்லெட்டுகளை வழங்க அர்ப்பணிப்புடன் மற்றும் இறக்குமதிக்கு ஆதரவளித்த திருமதி தனுஜா டயஸ், திருமதி சாயா பெரேரா, திருமதி மல்ஷினி பெரேரா, திருமதி திலகா தேவப்பிரியா மற்றும் திருமதி ஷெனாலி வடுகே ஆகியோருக்கு பல பாராட்டு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, திருமதி தனுஜா டயஸ், திருமதி சாயா பெரேரா, திருமதி திலகா தேவப்பிரியா, திருமதி ஷெனாலி வடுகே மற்றும் திரு நுஜீத் சமரவிக்ரம ஆகியோர் அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு மொபைல் டெப்லெட்டுகளை கையளித்தனர். ஒரு பயனாளியால் முன்மொழியப்பட்ட ஒரு சுருக்கமான நன்றியுரைக்குப் பின்னர் அனைத்து அழைப்பாளர்களும் மாணவர்களும் அன்றைய பிரதம அதிதியுடன் குழு படத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பிரதி பதவி நிலை பிராதனி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.