05th August 2023 05:52:13 Hours
இராணுவத் தலைமையகத்தின் உள்ள இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவு இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவ வீரர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை வெள்ளிக்கிழமை (ஒகஸ்ட் 04) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கியது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு வழக்கமான சம்பிரதாயங்களுக்கு மத்தியில், இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் இராணுவ சேவைப் படையணியின் தயிர் உற்பத்தித் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவிற்கு 3 குளிர்சாதனப் பெட்டிகளை கையளித்தார்.
குளிர்சாதனப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதன் பின்னர், கஜபா படையணியைச் சேர்ந்த அங்கவீனமுற்ற போர்வீரர் ஒருவருக்கு, பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டைப் பூர்த்தி செய்வதற்காக ரூபா 600,000/= பெறுமதியான பண காசோலை வழங்கப்பட்டது.
இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இணைந்து 100 உலர் உணவுப் பொதிகளை இராணுவ வீரர்களுக்கு வழங்கினர். ஒவ்வொரு உலர் உணவுப் பொதியிலும் அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், தேங்காய் பால் பாக்கெட்டுகள் என்பவற்றை கொண்டிருந்தன.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் என் மகாவிதான கேவீஎஸ், இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.