06th January 2022 08:48:26 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் குடும்பங்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்துடன் வெள்ளிக்கிழமை (24) நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் ஒரு நலன்புரித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனுசரணையாளரான திரு மாதவ தேனுவரவினால் வழங்கப்பட்ட நன்கொடையில், 50 க்கும் மேற்பட்ட இராணுவ குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் விஷேட படையணி தலைமையகத்தில் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம அதிதியாக விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்தி ரணசிங்க அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வில் சிறுவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்கினார்.