11th July 2022 16:28:02 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் 26 ஜூன் 2022 அன்று விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயனி சமந்தி செனரத் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
சேவை வனிதையர் பாடலைப் பாடிய பின்னர், உயிர்நீத்த விஷேட படையணி போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு, விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்கள் கூட்டத்தில் உரையாற்றியதுடன் சேவை வனிதையர் பிரிவு திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வும் செய்தார்.
தற்போது நடைபெற்று வரும் நலன்புரி திட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகளையும் அவர் வழங்கினார். காயமடைந்த போர் வீரர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் பணியாற்றும் விஷேட படையணி சிப்பாய்களின் நலம் குறித்தும் விசாரித்தார்.