15th September 2022 18:54:45 Hours
பயிர் நாற்றுகள், செடிகள் மற்றும் மரக்கன்றுகளை விற்பனை செய்வதன் மூலம் உள்நாட்டு பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் ஒரு முயற்சித் திட்டமாக விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினால் மாத்தளை நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் 7 செப்டம்பர் 2022 அன்று ‘நில் ஆரம்ப’ எனும் தாவர தாவரணை திறந்து வைக்கப்பட்டது.
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயனி சமந்தி செனரத் யாப்பா சேவை வனிதையர் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
‘நில் ஆரம்ப’ விற்பன நிலையத்தில் நாற்றுகள், காய்கறி செடிகள் மற்றும் அலங்கார செடிகள் உள்ளன. விஷேட படையணியின் படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.