Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd December 2022 23:01:12 Hours

விஷேட படையணி சேவை வனிதையரால் சிப்பாய்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்

விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயனி சமந்தி செனரத் யாப்பா அவர்களின் முயற்சியினால் திங்கட்கிழமை (டிசம்பர் 19) நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் அங்கு பணியாற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ரூ.4 மில்லியன் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

தொழிலதிபர் திரு மாதவ தேனுவர மற்றும் அவரது துணைவியார் திருமதி சந்தியா தேனுவர ஆகியோரின் அனுசரணையினால் இத் திட்டம் சாத்தியமானது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி பதவி நிலைப்பிரதானியும் விஷேட படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் தொழிலதிபர் திரு மாதவ தேனுவர மற்றும் அவரது துணைவியார் திருமதி சந்தியா தேனுவர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின் போது விஷேட படையணியின் படைத்தளபதி நன்கொடையாளர்களையும் குடும்பத்தினரையும் விஷேட படையணி சார்பாகப் பாராட்டியதுடன், நினைவுச் சின்னமாக திரு தேனுவர அவர்களுக்கு பாராட்டுச் சின்னமும் வழங்கினார்.

இந் நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.