31st January 2023 18:49:19 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயனி சமந்தி செனரத் யாப்பா அவர்கள், மாதுருஓயா விஷேட படையணி பயிற்சிப் பாடசாலையில் விஷேட படையணி அடிப்படைப் பாடநெறி பயிற்சியின் போது, திடீர் சுகவீனம் காரணமாக காலமான சிப்பாய் ஒருவரின், பகுதியளவு கட்டப்பட்ட வீட்டைப் பூர்த்தி செய்யும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் பிரதி பதவி நிலைப்பிரதானியும் விஷேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பின் மூலம், அனுசரணையாளர் திரு டிரோன் பிரியந்த மெண்டிஸ் அவர்களினால் வழங்கப்பட்ட ரூ. 550,000.00 பண உதவியுடன் விஷேட படையணி உறுப்பினர்களின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள ஆதரவுடன் வீடு கட்டி முடிக்கப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டை மறைந்த விஷேட படையணி சிப்பாயின் உறவினர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற விழாவில், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் படையணி படைத் தளபதி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.