25th March 2022 10:53:02 Hours
இலங்கை இராணுவ முன்னோடி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் 2 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெப்ரவரி 27 இலங்கை இராணுவ முன்னோடி படையணியின் கேட்போர் கூடத்தில் இலங்கை இராணுவ முன்னோடி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ரமணி ஜயசூரிய தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் இராணுவ முன்னோடி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ரமணி ஜயசூரிய அவர்களால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இராணுவ முன்னோடி படையணியின் குடும்பங்களின் ஐந்து மாணவர்களுக்கு தலா 7500.00 பெறுமதியான நிதிப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
அதேபோன்று, இலங்கை மக்கள் வங்கியின் அனுசரணையுடன், ஒவ்வொரு மாணவருக்கும் பாடசாலை உபகரண பொதிகள் வழங்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில் தரம் 1 இல் சேர இருக்கும் பிள்ளைகளுக்கு காலணிகளை வாங்குவதற்கு தலா ரூ.2000.00ம் வழங்கப்பட்டது.
பதவி விலகும் திருமதி சந்திரிகா சந்தமலி ஜயரத்ன மற்றும் பல சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுக்கும் பாராட்டுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.