Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th March 2022 18:23:41 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரால் பல நல திட்டங்கள்

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் 'சர்வதேச மகளிர் தினத்தை' முன்னிட்டு தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றும் இராணுவப் பெண்களுக்கும் பொதுவாக அனைத்து பெண்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்கும் வகையில் ‘தொழில்முனைவோர் மூலம் துணிச்சலான பெண்ணை வலுவூட்டல்’ என்ற தொனிப்பொருளில் 2022 மார்ச் 12 பனாகொட 4 வது பீரங்கி படையணி கேட்போர் கூடத்தில் விசேட நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகரவின் அழைப்பின் பேரில் இராணுவ நிதி முகாமைத்துவம் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷா ராஜபக்ஷ, நிலைய தளபதி, பிரிகேடியர் பந்துல லியனகே, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பெண்ணியத்தின் பெருமை மற்றும் சமூகத்திற்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், உயிர்நீத்த அனைத்துப் போர்வீரர்களையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சேவை வனிதையர் பிரிவினரால் கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் காட்டும், வகையில் தொடர் காணொளிகளும் காட்சிப் படுத்தப்பட்டன.

அதிகாரிகள் மற்றும் படையினரின் துணைவியர்கள் ஒன்றுகூடி கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டனர். திருமதி ஆர்பீ குசுமாவதி, இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியில் துணிச்சலான பெண்களின் சுய படைப்புகள் தொடர்பான காணொளிகளுடன் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் தொடர்பான முக்கிய உரையை நிகழ்த்னைார்.

இதற்கிடையில், நிகழ்வின் முடிவில் திருமதி சாந்தி அபேசேகர, திட்டத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் வகையில், சிடிசன் டெவலப்மன் வங்கியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு சரித வர்ணகுலசூரிய அவர்களுக்கு பிரதான அனுசரணைக்காக நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

சுனேத் சேனாதீர சிரேஷ்ட முகாமையாளர்-வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் சிடிபி உறுப்பினர்கள் Pat Pat.lk அதிகாரிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சிரச தொலைக்காட்சியில் அண்மையில் நடத்தப்பட்ட வனிதா ‘அபிமான’ விருது வழங்கும் நிகழ்வில், “விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் சிறந்த பெண்மணி” என்ற விருதினைப் பெற்ற திருமதி நதீ லியனகே அவர்களும் பாராட்டப்பட்டார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்றைய தினத்தின் நினைவாக “அல் வீ” எனும் கன்று வழங்கப்பட்டது. அதற்கமைய பொறியியல் சேவை படையணியின் படைத் தளபதிக்கு 85 மருத மரக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன. இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையலகுகள் மற்றும் பண்ணைகளுக்கு 23 நீர் சுத்திகரிப்பு இயந்திரம், 1 வது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி பண்ணைக் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவதற்கான 413 லிட்டர் டியுலக்ஸ் வர்ணப்பூச்சுகள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினரான திருமதி கௌசல்யா ரணசிங்கவின் உதவியுடன் வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதி அவர்களின் படையணி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இராணுவ விவசாயத்தின் எதிர்காலம் பற்றிய உரையுடன் அன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது. மற்றும் "தாய்நாட்டிற்கு செழிப்பை" கொண்டு வருவதற்கான துணிச்சலான முயற்சிக்கு ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் “விரு லிய” விவசாய பொருட்கள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் இடம் பெற்றது.