Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th June 2022 22:34:26 Hours

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரால் முதியோர் இல்லத்திற்கு உலர் உணவு

யக்கல வரபலான லீலா விதாரண முதியோர் இல்லத்தின் முதியோர்களுக்கு 14 ஜூன் 2022 இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர தலைமையில் விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் அனுசரணையுடன் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 30 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

நிதி முகாமைத்துவம் பணிப்பாளர் நாயகமும் விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் அனைத்து படையலகுகள் இத் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கின.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர கலந்து கொண்டார். மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் இன்னும் சில சிரேஷ்ட அதிகாரிகள் விடுதிகளுக்கு விஜயம் செய்து 30 முதியவர்களையும் சந்தித்து அவர்களின் நலன், தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளை கேட்டறிந்ததுடன் பரிசு பொதிகளையும் விநியோகித்தனர்.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி சுமுது ரத்நாயக்க, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ, நிலைய தளபதி பிரிகேடியர் ஜனக ரத்நாயக்க, விவசாய மற்றும் கால்நடைப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ, லெப்டினன் கேணல் ஆர்டி கனேகொட, 2 வது (தொ) இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஎஎம்டி ஜயசுந்தர, அதிகாரிகள் மற்றும் விவசாய சேவை வனிதையர் பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.