19th July 2023 09:38:14 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கணேமுல்லை கொமாண்டோ படையணி தலைமையகத்தில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.
சேவை வனிதையர் கீதம் இசைத்ததுடன், உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவு செலவு அறிக்கை சமர்ப்பணத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கொமாண்டோ படையணியின் நாய்களின் சாகாச காட்சிகள் இடம்பெற்றதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பில் அழகு கலை நிகழ்வும் அதே இடத்தில் இடம்பெற்றது.