19th July 2023 09:41:18 Hours
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் சிவில் ஊழியர் ஒருவரின் மகளுக்கு கொமாண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் அண்மையில் மடிக்கணினி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந் நன்கொடையானது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த தனது அன்புத் தந்தையை நினைவுகூரும் வகையில், ஐட்கென் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு.கபில அபேகுணவர்தன அவர்களின் உதவியினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் 53 காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலை உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) கொமாண்டோ படையணி குடும்பங்களின் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்த திட்டத்தை கொமாண்டோ படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பீஎம்எஸ்கேகே தர்மவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் மேற்பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கொமாண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.